தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – இந்தியா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்திய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் தீர்வுத் திட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் உலக சமூகத்திற்கு ஒர் நல்ல செய்தியை வெளியிட முடியும் என தெரிவித்துள்ளது.
எவ்வாறான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் நிகழ்ச்சி நிரலொன்றை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
வெறுமனே பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்காது அதனை செயல் ரீதியாக அமுல்படுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply