நாடு முழுவதும் மூன்று மாதங்களில் 50 ஆயிரம் பேர் கைது
கடந்த 3 மாதங்களில் பலதரப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நிலையில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன மோசடி, போதைப் பொருள் மற்றும் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை தொடர்பாக நீதிமன்ற ஆணையை மீறி தலைமறைவாகியிருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.
இதுதவிர, தொடர்ந்தும் நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ அவமதிக்கும் வகையில் தலைமறைவாகியிருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் சரணடையுமாறு அதன் ஊடகப் பேச்சாளர் அஜித் றோகன கோரிக்கை விடுத்துள்ளார்.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கட்டுகஸ்தோட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக 48 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மைக்காலமாக மிக முக்கியமாக தேடப்படும் நபர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்துள்ளார்.
அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றசெயல்கள் தொடர்பில் 24 பிடிவிறாந்துகளும், காலியில் அவர் மேற்கொண்ட சட்டவிரோத செயல்கள் குறித்து 19 பிடியாணைகளும், பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இதுதவிர, பூகொட, அத்தனகலை, கோட்டை, மட்டக்களப்பு மற்றும் ரத்தினபுரி பிரதேசங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து அவருக்கு எதிராக தலா ஒவ்வொரு பிடியாணைகளும், பிறப்பிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த முக்கிய சந்தேகத்திற்குரியவர் நாடளாவிய ரீதியில் 16 இடங்களின் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தவர் எனவும், பலரை அவர் மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply