ஐநா குழுவினரது இலங்கை விஜயம் நிறைவு

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாட்டிலிருந்து பயணமாகியுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக இந்த குழு கடந்த வாரம் நாட்டிற்கு வருகைத் தந்ததாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பெசில் ராஜபக்ஸ மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரையும் இந்தக் குழுவினர் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு தமது இலங்கைக்கான விஜயத்தின் ஓரங்கமாக யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

இதன்போது யாழ். பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply