ஐநாவில் இலங்கைக்கு எதிரான மனிதஉரிமைகள் தீர்மானம்
ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனிதஉரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் மனிதஉரிமைகள் கூட்டத்தின் மூன்றாவது அமர்விலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிகள் நடப்பதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிரித்தானிய அரசின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று நியுயோர்க்கில் ஐ.நாவின் பல்வேறு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தனது பெயரை வெளியிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் வரும் ஒக்ரோபர் 10ம் நாள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஐ.நாவில் இந்த்த் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இலங்கை அரச அதிகாரிகள் பலரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply