ராஜீவ் காந்தியை புலிகள் கொன்றமைக்காக இலங்கை தமிழர்களை காங்கிரஸ் பகைக்காது

கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஆதரித்து கடலூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:- இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிரானது என்று சீமான், வைகோ போன்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பிந்தரன்வாலே என்ற சீக்கியன் இந்திராகாந்தியை சுட்டுக்கொன்றான் என்பதற்காக சீக்கியர்களையே காங்கிரஸ் கட்சி பகைக்கிறதா? இல்லையே! அதே சீக்கிய இனத்தைச்சேர்ந்த மன்மோகன் சிங்குக்குத்தானே பிரதமர் பதவியை காங்கிரஸ் கட்சி வழங்கியது.

காங்கிரஸ் கட்சிக்கு, பிந்தரன்வாலேயையும், மன்மோகன்சிங்கையும் பிரித்தரியத் தெரியும். அதேபோல் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்பதற்காக இலங்கை தமிழர்களை காங்கிரஸ் கட்சி பகைக்காது. இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நன்மை செய்ய முடியும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி எம்.பி. பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply