பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல்
பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாலும் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடித்து வருவதாக இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்குப் பொறுப்பான கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் பி.கே. வர்மா தெரிவித்துள்ளார். கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகைள வலுப்படுத்த வேண்டியது மிகவும் அவசயிமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முற்று முழுதாக தீர்ந்துவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply