தமிழ்நாட்டுக்கான பயண எச்சரிக்கையை விலக்கிகுவது குறித்து பீரிஸ் வந்திறங்கிய பின் தீர்மானம்
நியுயோர்க் சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு திரும்பிய பின்னரே, தமிழ்நாட்டுக்கான பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்த கடந்த மாதத் தொடக்கத்தில் தமிழ்நாட்டுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம ‘பயண எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் எத்தகைய தாக்குதல் சம்பவமும் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியுயோர்க் சென்ற வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், நாளை காலை கொழும்பு திரும்புவார்.
அதன் பின்னரே இந்த பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை பயணிகளின் பாதுகாப்புக்கு இந்தியா உத்தரவாதம் கொடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் பிரேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply