சீன நிலச்சரிவில் சிக்கி பள்ளி மாணவர்கள் 18 பேர் பரிதாபமாகப் பலி
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் யில்லாங் என்ற கிராமம் உள்ளது. இங்கு இன்ற காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. அப்போது பள்ளியில் இருந்த 18 மாணவர்கள் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள பல வீடுகளும் நிலச்சரிவில் சேதம் அடைந்தன. நிலச்சரிவில் இருந்து தப்பியவர்கள் மற்றும் வீடுகளை இழந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். விபத்து நடந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்ததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply