முக்கிய பேச்சு இன்று! பிரச்சினை தீர்வை எட்டும் ?
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இன்று (05) முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் பங்கேற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படுமென உயர் கல்வி அமைச்சு தெரிவித்தது. நேற்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதும், அமைச்சர்களின் தீர்மானத்திற்கமைய இன்றைய தினம் இப்பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக உயர் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் நவரத்ன தெரிவித்தார்.
இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த் தைக்கு முன்னோடியாக நேற்றும் உள்ளக மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதும் இன்றைய பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.
சுமுகமான பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் விரிவுரையாளர் சம்மேளனமும் இணைந்து மேற்கொள்ளப்படும் இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் விரிவுரையாளர்களின் பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் உணரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply