1950களில் சித்ரவதைக்குள்ளான கென்யர்கள் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர அனுமதி
கென்யாவில் 1950களில் பிரிட்டிஷ் காலனீய ஆட்சிக்காலத்தில் சித்ரவதைக்கு ஆளானதாகக் கூறும் கென்யர்கள் மூன்று பேர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர அனுமதி அளித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடந்த விஷயங்களை பிரிட்டிஷ் இராணுவம் தெளிவாகப் பதிந்து வைத்திருப்பதால் அவை தொடர்பில் போதுமான ஆவணத் தடயங்கள் உள்ளன என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மாவ் மாவ் கிளர்ச்சி என்று சொல்லப்படுகின்ற விடுதலைப் போராட்ட கிளர்ச்சியின்போது, தடுப்புக் காவல் முகாம்களில் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளானதாக வழக்கு தொடுத்தவர்கள் வாதிடுகின்றனர்.
இத்தீர்ப்பைக் கேட்டு கென்யாவில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டுவதன் மூலம் பிரிட்டன் இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக தீர்க்க முடியும் என தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் பேராயர் டெஸ்மண்ட் டூடூ கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply