காணாமற் போனோர் தொடர்பில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி
இலங்கையில் காணாமற்போன சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் தொடர்பில் அரசு மேற் கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபை அமர்வுக்கு முன்னர் இதற்கான விளக்கத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும் என நவநீதம்பிள்ளை கேட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஜெனிவாவிலுள்ள இலங்கைப் பிரதிநிதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துக் காணப்படுகின்றன.
இந்த விடயம் குறித்து இலங்கைக்குப் பயணம் செய்த மனித உரிமைகள் சபை உறுப்பினர்களும் அரசின் கவனத்துக் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் இலங்கை அரசு இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தொடர்ச்சியான மௌனத்தையே கடைப்பிடிப்பதாகவும் அந்தக் கடித்த்தில் நவநீதம்பிள்ளை இலங்கை அரசைச் சாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply