இலங்கைக்கான 250 கோடி அமெரிக்க டொலர் கடன்தொகை குறித்து பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 250 கோடி அமெரிக்க டொலர் கடன்தொகையின் மேலதிக கொடுப்பளவுகள் குறித்து பேச்சுவார்தைகள் இடம் பெறவுள்ளன. இது தொடர்பாக நிதியத்தின் குழு வொன்று இலங்கை வரவுள்ளதாக வர்த்தக தரப்பு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு பிரதிநிதி கோஷி மாத்தாய் நிதிய அதிகாரிகளுடன் வழமையான கருத்து பரிமாறல்களை மேற்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருனாதார வளர்ச்சி குறைந்த அளவில் உள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி ஸ்திர தன்மையினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply