அணு மின் நிலையம் குறித்து இலங்கை – இந்தியா பேச்சு

அணு மின் நிலையம் குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஐ.அன்சார் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஹார்ஷ் வர்தான் சிரின்கலா தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.  

மிகவும் நட்பு ரீதியானதும், ஒத்துழைப்புடன் கூடியதுமான முறையில் இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சிவில் தேவைகளுக்காக எவ்வாறு அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டின் நடுப்பகுதியளவில் மீளவும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply