சீனாவின் உதவியுடன் இலங்கையில் செயற்கை மழை

செயற்கையாக மழையை பெய்யச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் செயற்கையாக மழையை பொழியச் செய்ய சீன அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பாரியளவு வரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இவ்வாறான நெருக்கடிகளுக்கு நாடு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செயற்றை மழையைப் பொழியச் செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகள் சீன அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பம் மழை பொழியச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply