திவிநெகும சட்டமூலம் குறித்து பசில் விளக்கம்

சமூர்தி அதிகார சபையின் வேலைத்திட்டங்களை விரைவுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய வண்ணம் திவிநெகும சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டார்.

திவிநெகும சட்டமூலம் முதற்கட்டமாக, மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, அண்மையில் அரச சேவைக்காக இணைத்து கொள்ளப்பட்டவர்களுக்கு நாளையதினமே நிரந்தர நியமனம் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம் பெறுவதன் காரணமாக அதனை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply