வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பு அவசியம் – ஜனாதிபதி

டுபாயில் நடைபெற்றுவரும் உலக எரிசக்தி மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இந்த நிறைவு தின நிகழ்வு டுபாய் உலக வர்த்தக மத்திய நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் சிலரை சந்தித்தார். 30 வருடங்களின் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் குழுவினருக்கு பதிலளிப்பதற்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply