நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க போராட வேண்டும் – திஸ்ஸ
நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அரசியல் கட்சிகள், சிவில், சமூக அமைப்புகள் அனைவரும் பேதங்களை மறந்து ஓரணியில் இணைந்து போராட முன்வர வேண்டுமென ஐ.தே.க.யின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க அழைப்பு விடுத்தார். பிரதம நீதியரசரை வெளியேற்றும் அரசாங்கத்தின் முயறசியை அரசிற்குள்ளிருக்கும் பலர் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார். அங்கு அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
பிரதம நீதியரசருக்கு எதிராக கீழ்த்தரமான சேறு பூசும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அநாமதேய கடிதங்களை பாராளுமன்றத்தில் சமர்பித்து பிரதம நீதியரசரை வெளியேற்றும்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அத்தோடு நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தத்ககப்பட்டது தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. விசாரணைகள் நடத்தப்படவும் இல்லை. எனவே, இன்று நீதியின் சுயாதீனத்திற்கு பாரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply