மணமகள் இல்லாத திருமணம் செய்ய அரசு முயற்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பேசாவிட்டாலும் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவோம் என அரசாங்கம் கூறி வருகின்றது. அப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசாது, எம்மை ஒதுக்கி விட்டு தீர்வு கொடுப்பது என்பது மணமகள் இல்லாத திருமணம் போன்றுதான் இருக்கும். அரசோடு பேசுவதற்கு நாம் இப்போதும் தயாராகவே உள்ளோம்.

ஆனால் அரசுதான் எம்மை பேச்சுக்கு அழைக்காமல் ஏமாற்றி வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாவிட்டாலும் வழங்குவோம் என அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களும், அரசும் கூறி வருவது தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் அவ்வாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. இதனை தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் பல்வேறு செயற்பாடுகள் மூலமும் நிரூபித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒதுக்கிவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்க முடியாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply