ஜனாதிபதி மஹிந்தவின் பிறந்த நாள் கொண்டாட்டம்! முல்லைத்தீவில் இந்து கோயில்கள் புனரமைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் – ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்கள் புனரமைக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அபிவிருத்தி மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடகால பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சீரழிந்துபோயிருந்த நாட்டை ஒரே தேசமாக- ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுத்தி வரலாற்றுச் சாதனை புரிந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும் ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதிலும் சகல சமய வழிபாடுகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுதக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாத்தறையில் இருந்து வவுனியா வரையில் 705 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சைக்கிள் சவாரியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply