அசாதாரண காலநிலையினால் நாட்டின் பல பாகங்கள் பாதிப்பு
அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் பிந்தெனிய பிரதேசங்களில் 2 மரணங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 70 ஆயிரம் மக்கள் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, நிலாம் சூறாவளியால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லாத போதும், அதன் நகர்வால் அசாதாரண காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையகத்தில் நிலவும் அசாதாரண காலநிலையால் நிரம்பியுள்ள மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு அவசர கதவுகள் இன்று மாலை வரை திறக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, களுத்துறை குக்குலேகங்க நீர்த்தேக்கத்தின் 3 அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தாழ்நில மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்திற்கு அருகாமையில் நின்றிருந்த முச்சக்கரவண்டியொன்றின் மீது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கொழும்பில் இப்பன்வல, நகரமண்டபம், கிங்ஸி வீதி, ஹோர்ட்டன் பிளேஸ், வோட் பிளேஸ் போன்ற பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹய்லெவல் வீதியின் திம்பிரிகஸ்யாய சந்தியில் காவல்துறை மைதானத்திற்கு அருகில் இரண்டு பாரிய மரங்கள் சரிந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரம்பொடை – வேவென்டன் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 9 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தும்ஹி;ந்த நீர்வீழ்ச்சி உள்ள பகுதியில் போக்குவரத்து பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையிலிருந்து பெரும் பாறைகள் உருண்டு வீழக்கூடிய அபாயம் இருக்கின்றமையால் இந்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.
சாமிமலை, ஸ்டொக்ஹொம், பொகவந்தலாவை – டிங்சிங், ரூவாகொல, கெக்கசோல்ட் மேல்பிரிவு பிரதேசங்களில் கடும் காற்று காரணமாக இன்றையதினமும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பாரிய மரங்கள் முறிந்தமையினால் சில பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அப்புத்தளை, பங்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதுடன் சில மரங்களும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் பிரதேசத்தின் நிலைமைகளை ஆராய்ந்து வருவதுடன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் அனர்த்தங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply