அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 43 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முயற்சித்த 43 பேர் கரையோர பாதுகாப்பு மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நேற்று (01) இரவு பேருவளை கடல்வழியாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர்.

இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

படகில் பயணித்த மேலும் 7 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறித்து தகவல் திரட்டப்பட்டு வருவதாகவும் குற்றத்தடுப்புப் பிரிவினர் குறிப்பிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply