இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலில்
இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக விசனம் தெரிவித்துள்ள சர்வதேச வழக்குரைஞர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம், சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை உயரதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது விசனத்தை தெரிவித்துள்ளது.
நீதித்துறையை பயமுறுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த தாக்குதலைக் கருதுவதாக அவ்வமைப்பு விடுத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply