கல்வித்துறையில் நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றம் வேண்டும்
கல்விதுறையில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை பெரும்பாலானவர்கள் அறிந்திராமலே இருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வினாபத்திரங்களில் ஏற்படும் சிற்சில குறைப்பாடுகளை, கல்வி துறையின் குறைப்பாடுகளாக சிலர் பார்க்கின்றனர்.
எனினும் தற்போதுள்ள இலவச கல்வி முறையில் பல குறைப்பாடுகள் நிலவுகின்றன. இந்த முறையானது மிக நீண்ட காலத்திற்கு முன்னர் அறிமுகஞ் செய்யப்பட்டதாகும்.
இதனை நவீன காலத்திற்கு ஏற்றவகையில் மாற்றம்செய்ய வேண்டியது அவசியம் எனவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply