பிரதம நீதியரசரை பழிவாங்கும் படலத்தை அரசு ஆரம்பித்துள்ளது
அரசாங்கம் பிரதம நீதியரசரை பழிவாங்க முயற்சிக்கின்றதென முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். புறக்கோட்டையிலுள்ள சொலிஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தற்போது பிரதம நீதியரசரை பழிவாங்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது. அமைச்சர்கள் கோழைத்தனமான அறிக்கைகளை வெளியிட்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரை அவமரியாதை செய்கின்றனர்.
அரசாங்கம் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றது. எனினும், அவை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையவில்லை. நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் அழுத்தம் பற்றி அறிந்திருந்தாலும், அதற்கு எதிராக எவரும் குரல் கொடுப்பதில்லை.
பிரதம நீதியரசரிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை முயற்சிக்கு எதிராக சட்டத்தரணிகள் இணைந்து போராட வேண்டும்.
இதேவேளை, உலக நாடுகளுடனும் மற்றும் பிராந்திய வலய நாடுகளுடனும் ஒப்பிடும் போது இலங்கையிலேயே நீதிமன்றத் துறையின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றதை அவதானிக்கலாம். நீதிச் சேவைகள் ஆணையாளர் மஞ்சுள திலகரட்ன மீது தாக்குதல் நடத்தியவர்களை இன்னமும் கைது செய்யவில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply