ஹம்பாந்தோட்டையில் நீர் மின் நிலையம் ஸ்தாபிப்பதற்கு திட்டம்
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நீர் மின் நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆரம்ப திட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தென் மாகாணத்தில் ஸ்தாபிக்கப்படும் முதலாவது நீர் மின் நிலையமாக இது அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் உள்ள கட்டுவான பிரதேசத்தில் உள்ள கெசல்வத்த என்ற இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மின் நிலையம் 25 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply