வட மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டி – டக்ளஸ் அறிவிப்பு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வட மாகாணசபை தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளேன் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வட மாகாணசபைத் தேர்தலில் முதலைமைச்சர் வேட்பாளராக நானே போட்டியிடவுள்ளேன். எனது விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் நடந்துகொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.
வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தரப்பில் கே.பி போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்று கேட்டதற்கு கே.பியும் போட்டியிடலாம். ஆனால் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிப்பது மக்கள் என்றும் அவர் கூறினார்.
வடக்கில் நடைபெறுகின்ற நில அபரிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன்
கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான கொள்கையுடன் செயற்படவில்லை என்றும் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்றும் அவர்
தெரிவித்தார்.
அத்துடன் ஈ.பி.டி.பினர் விடும் தவறுகளை நேரடியாக சுட்டிக்காட்டும் போது அதனை வரவேற்பதாகவும் தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்ப தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply