விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கலாமா என்பது குறித்த தனது தீர்ப்பை டெல்லியில் உள்ள சட்டவிரோத செயல் தடுப்பு சிறப்பு தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 1992 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இரண்டாண்டுக்கு ஒரு முறை இந்தத் தடையை மத்திய அரசு நீட்டித்து வருகிறது. எனினும், 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த போர், நிறைவடைந்த நிலையிலும், விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுவதற்கு அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக சமீப காலமாக குற்றச்சாட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில் தடை அவசியம் அற்றது என்றும் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சட்டவிரோத செயல் தடுப்பு சிறப்பு தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டு வந்தது. அரசு தரப்பில் தடையை நீட்டிப்பதற்கான காரணத்தை அரசு வழக்கறிஞர் முன் வைத்தார். இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் நீதிபதி வி.கே.சிங். தீர்ப்பை இன்று ஒத்திவைத்தார்

இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்றும், விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டிற்கும் அந்த இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply