மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகம் சீனாவில் இல்லை!

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய 18வது தேசிய கூட்டம் நடைபெறவுள்ளது. சீனா அரசில் சீர்திருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயகம் அங்கு இருக்கவில்லை என்று மக்கள் தினசரி பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது. இதுகுறித்து அந்தப் பத்திரிக்கை கூறியிருப்பதாவது:-

‘ஜனநாயகம்’ அரசின் கொள்கையாக மட்டுமில்லாமல், மக்களின் தேவைகளை சந்திக்கிற ஒரு வாழ்க்கை முறையாக இருக்கவேண்டும். ஒப்புக்கொண்டபடி, ஒன்றை தெரிந்துகொள்ளுவதற்கான உரிமை, கலந்துகொள்ள மற்றும் சட்டப்படி நடக்க உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இங்கு அதிகரித்துள்ளது. ஆனால் மக்கள் எதிர்பார்த்தபடி ஜனநாயகம் இங்கு நடக்கவில்லை.

எப்படியோ நாடு ஜனநாயகப் பாதையில் செல்வதற்கான நிலையான முயற்சியை சீனா எடுத்து வருகிறது. இருந்தும் மக்கள் விரும்பியபடியான ஜனநாயகம் இங்கு இருக்க வேண்டும். மேற்கத்திய ஜனநாயகமுறை இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் சூழ்நிலைக்கேற்றவாறு ஜனநாயகம் இருக்கவேண்டும். சீனாவின் சூழ்நிலைகள் மற்றும் கலாச்சாரத்திற்கு ஏற்ற பொருத்தமான சீனா பாணியிலான ஜனநாயகம் இருக்கிறது. நாட்டை நவீன உலகிற்கு ஏற்றவாறு சிறப்பாக மாற்றியமைக்க வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply