நவரு தீவில் உள்ள சிலர் நாடு திரும்ப விருப்பம்

அவுஸ்திரேலியா நவரு தீவில் இருகின்ற இலங்கையை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்களில் சிலர் மீண்டும் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்களில் ஆண்கள் 11 பேரே இவ்வாறாக நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் புதிய குடியேற்ற சட்டத்தின் பிரகாரம் புகலிட கோரிக்கையாளர்களாக படகு மூலம் செல்பவர்கள் நவரு அல்லது பாப்புவா நியூ கினியா தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது நவரு தீவில் 377 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருக்கின்றனர். புகலிட கோரிக்கையாளர்களில் 300 பேர் உணவை மறுக்கின்றனர். மேலும் 25 பேருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply