இந்திய இராணுவ தளபதி இலங்கை வரவுள்ளார்
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகளுக்கு எதிராக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே இந்திய இராணுவ தளபதி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவர் எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய இராணுவ தளபதியின் இந்த விஜயத்தின் போது கூட்டு பயிற்சி, இராணுவ உபகரணம் மற்றும் பயிற்சிகள் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply