ஐ.நாவின் செயற்குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு வேண்டுகோள்
காணாமல் போதல் பற்றிய ஐ.நாவின் செயற்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திடமும் அது தொடர்பில் ஆவனம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் காணாமல் போனமை தொடர்பான இலங்கை விசாரணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடத்தல்களில் இருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் இலங்கை கையொப்பமிட வேண்டுமெனவும் இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்களை ஆராய ஒரு சுதந்திரமான ஆணைக்குழுவை அமைக்குமாறு கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செய்துள்ளன அதனை பூரணமாக செயற்படுத்த வேண்டுமெனவும் இந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
காணாமல் போனமை தொடர்பான விசாரணைக்குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளரான எக்னெலிகொடவின் மனைவி ஆகியோர் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட அரச நிறுவனங்கள், காணாமல்போன சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் தவறியுள்ளன என ஜனாதிபதிக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கும் முக்கிய நிறுவனங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன குடும்பங்களின் அங்கத்தவர்கள் நாம் என்ற வகையில் எமது அன்புக்குரியவர்கள் எங்கோ உள்ளனர் என்பது தெரியாமலும் அவர்களின் கதி என்னவாயிற்று என்பது தெரியாமலும் பெரும் துன்பத்தில் ஆழ்ந்து பரிதவிக்கின்றோம் என இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply