கொலன்னாவவில் துமிந்தவின் பதாகைகளை எரித்து ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பிறந்த தினம் மற்றும் அதனையொட்டிய போதி பூஜைகள் என்பன தொடர்பில் கொலன்னாவ பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மற்றும் பதாகைகள் காரணமாக இன்று மாலை அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிக்காவின் ஆதரவாளர்களால் வீதியில் துமிந்த சில்வாவின் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் என்பன எரிக்கப்பட்டதையடுத்து மேற்படி அமைதியின்மை ஏற்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளான ஹிருணிக்காவின் வீட்டிலிருந்து வந்த சுமார் 100 பேர் அடங்கிய குழுவினர் கொலன்னாவ சந்தியில் வைத்து துமிந்த சில்வாவின் பெரிய கட்டவுட் ஒன்றினை வீழ்த்தி எரித்துள்ளதுடன் அப்பகுதியில் இருந்த சிறு போஸ்டர்களையும் தீயிட்டதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் ‘கொலைகாரனுக்கு எதற்கு பூஜை, பிறந்த நாள் கொண்டாட்டம்?’ என கோஷங்களை எழுப்பியுள்ள குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு அமைதியின்மையும் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லம்பிட்டிய பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply