அனர்த்த நிலவரம்: 16 பேர் பலி 14 மாயம் 1,75,558 பேர் நிர்க்கதி
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளதோடு 14 பேர் காணாமற் போயுள்ளனர். மண்சரிவு, சுழல் காற்று மரம் முறிவு என்பவற்றால் 146 வீடுகள் முழுமையாகவும் 805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக நாடு முழுவதிலும் 45,916 குடும்பங்களைச் சேர்ந்த 1,75,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3,394 குடும்பங்களைச் சேர்ந்த 9,696 பேர் 47 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply