கினிய படகு விபத்தில் 22 பேர் பலி: 69 பேர் மாயம்

கினியாவ் பிசாவ் நாட்டின் தலைநகர் பிசாவிலிருந்து அட்லாண்டிக் கடலில் உள்ள போலோமா தீவு நோக்கி படகு ஒன்று புறப்பட்டு சென்றது. மிக அதிகமாக 97 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு, அட்லாண்டிக் கடலில் திடீரென கவிழ்ந்தது. அப்போது அந்த படகிலிருந்த அனைவரும் கடலில் மூழ்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 பேரை உயிருடன் மீட்டனர். இறந்த 22 பேரின் சடலங்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டது. மீதமுள்ள 69 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply