நாட்டின் காலநிலை வழமைக்கு திரும்புகிறது
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் மீண்டும் தமது வதிவிடங்களிற்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் மன்னார் மாவட்டத்தின் வீதிகள் பல தற்போதும் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தற்காலிக இடைத்தங்கல் முகாம்கள் 246இல் தங்கியிருந்த மக்கள் தமது வீடுகளிற்கு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 40 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply