இலங்கையில் பொது நலவாய மாநாட்டு: கெமரூன் பங்குபற்றலை மறுபசீலனை செய்யுமாறு கோரிக்கை

அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வது தொடர்பில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் மருபசீலனை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொச்டல் சைமன் டன்சாக் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அண்மையில் பிரித்தானிய பிரஜை ஒருவர் இலங்கையின் தென்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் இன்னும் காத்திரமான விசாரணைகள் இடம்பெறவில்லை.

இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் கொழும்பு  – பொதுநலவாய மாநாட்டில் கலந்துக் கொள்வது உகந்ததாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply