57வது ஒழுங்கை தமிழ்ச்சங்க வீதியாக பெயர் மாற்றம்

வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள 57வது ஒழுங்கை தமிழ்ச்சங்க வீதியென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். இவ்வீதி ஏற்கனவே பெயர்மாற்றம் செய்யப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இது தொடர்பில் பல சர்ச்சைகளும் எழுந்திருந்தன. இந்நிலையில் எவ்வித சிக்கல்களும் அற்ற நிலையில் தமிழ்ச்சங்க வீதியென பெயர் மாற்றம் செய்ய உதவிய அனைவருக்கும் தான் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அஸ்வர் எம். பி. கூறினார்.

இது தொடர்பான பிரேரணையை முன்வைத்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வேலணை வேனியனுக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இது தமிழ் மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply