நைஜீரியாவில் 15 கிறிஸ்துவர்கள் கழுத்தறுத்து கொலை

எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற தீவிரவாத குழுவினர் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அரசு நாட்டின் வடக்கிலுள்ள மைதுகுரி பகுதியில் புதிய அதிரடிப் படையினரை பணியில் அமர்த்தியுள்ளனர். அப்பகுதியில் ராணுவத்தினர் வழக்கமாக ரோந்து சென்றனர்.

அப்போது கிறிஸ்துவர் அதிகம் வசிக்கும் ஒரு கிராமத்தில் 15 பேர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்ததை கண்டனர். இவர்களை தீவிரவாதிகள் கொன்றதையும் அப்பகுதி வாசிகள் உறுதிபடுத்தினர்.

நைஜீரியாவில் வடக்கில் இஸ்லாமியர்களும் மற்றும் தெற்கில் கிறிஸ்துவர்களும் அதிகம் வசித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply