ஆஸியிலிருந்து 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப விருப்பம்
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த மேலும் 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். நெஹ்ரூ தீவு முகாமில் தங்கியிருப்பதனை விடவும் நாடு திரும்புவது உசிதமானது என புகலிடக் கோரிக்கையாளர்கள் தீர்மானித்துள்ளனர். புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை முன்வைக்கப் போவதில்லை என குறித்த இலங்கையர்கள் குறிப்பிட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் வார்த்தைகளை நம்புவதனால் பயனில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் நெஹ்ரூ தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மனுஸ் மற்றும் நெஹ்ரூ தீவுகளுக்கு அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைப்பதன் மூலம், பலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கக் கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply