வெளிநாட்டு சக்திகளின் நம்பிக்கையில் சிலர் நாட்டை சீரழிக்க முயற்சி – ஜனாதிபதி மஹிந்த

நாட்டைக் கட்டி எழுப்பும் பொறுப்பும், கடப்பாடும் எமக்கு உண்டு. நாட்டை எதிர்கால சந்ததிக்கு நாம் ஒப்படைக்க வேண்டும்.இன்று வெளிநாட்டு சக்திகள்மீது நம்பிக்கை வைத்த சிலர் நாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றனர். பாத்ததும்பரை பிரதேச புதிய செயலக கட்டடத் திறப்புவிழாவில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த அரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொள்வதிலேயே அவர்கள் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர். அது அவர்களின் பழக்கமாகும். நாட்டை அந்தச் சக்திகளிடம் கொடுக்க இயலாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னரான குறுகிய காலத்தில் தான் இவ்வாறான பெரும் பணிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இவை பாரிய பணிகளாகும். தற்போது சுதந்திரமாக பணியாற்றக் கூடிய சூழ்நிலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பாத்ததும்பர பிரதேச சபை புதிய கட்டட திறப்பு விழாவில் பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்தே பாத்ததும்பர பகுதியில் ஆற்றிய பணிகளை ஜனாதிபதி விதந்து பேசினார்.

அவர் இன்று இல்லை. இன்று லொஹான் ரத்வத்தே வந்து சிறப்பிப்பது எமக்கெல்லாம் பெருமை தருவது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து கூறியதாவது:- நாட்டின் ஆதனங்களை விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய நாம் ஒருபோதும் தயாரில்லை. அதுவே அரசின் கொள்கையாகும். சிலர் ஸ்ரீலங்கன் விமானச் சேவையை விற்றனர். எதியோப்பியாவிற்கு விமானச் சேவை இருந்தது. எமக்கு இருக்கவில்லை.

நாம் பணம் கொடுத்து அதனைப் பெற்றோம். இதுதான் உண்மை. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதே எமது பொறுப்பாகும். எதிர்கால சந்ததியை கற்றறிந்த சமூகமாக நாம் மாற்ற வேண்டும். பாடசாலை அபிவிருத்திக்காக பெருந்தொகை நிதியைச் செலவிட வேண்டும். நாம் சகல மக்கள் பிரிவுகளையும் ஒன்றுபடுத்தி முன்னோக்கிச் செல்கிறோம். அதனால் தான் மும்மொழிகளையும் கற்கிறோம். கிராமத்திலுள்ள பிள்ளை ஆங்கிலம், தாய்மொழி, பிற மொழிகளையும் கற்க வேண்டும். இந்த அறிவைப் பெற்றுக்கொடுப்பது எமக்கு கடமையாகும்.

அது தேசிய ஐக்கியத்துக்கு பெரும் துணையாகும். எமது நாட்டுக்கு மட்டுமன்றி உலகுக்குத் தேவைப்படும் கற்ற, அறிவு, ஞானம் மிக்க பரம்பரையை கல்வி உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply