கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு உயிர்வாழ உரிமை இல்லை – முன்னாள் இந்திய ஜனாதிபதி
டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஆர்ப் பாட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட கற்பழிப்பு குற்றவாளிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆவேச கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக புனேயில் அவர் செய்தியாளர்களிடம்,’
டெல்லி மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அரிதான வழக்குகளில் அரிதானதாக உள்ளது. என்னை பொருத்தவரை இந்த வழக்கில் குற்றவாளிகள் உயிர் வாழ உரிமை இல்லாதவர்கள்.
இதுபோன்ற வழக்குகளில் மிக உயரிய தண்டனை அவசியம். இது தொடர்பாக பாராளுமன்றம்இ சட்ட வல்லுனர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று அமலுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply