குழு மோதலில் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் பலி

கம்பஹா, நதகமுவ பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைக் கலப்பில் ஜா எல பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் உயிரிழந்துள்ளார்.  இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பணப் பிரச்சினையின் காரணமாக இந்த கைக்கலப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜெயக்கொடி தெரிவித்தார். 

பிரதேசசபை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இதன்போது காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (26) மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply