நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் : மங்கள சமரவீர
நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்ட வேண்டுமாயின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரம், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான சர்வதேச குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அத்துடன் தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வாதிகாரப் போக்கில் நாட்டை ஆட்சி செய்ய முயற்சித்து வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த நாட்டில் மிகச் சிறந்த தலைவராக மாறுவதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், துரதிஸ்டவசமாக அவர் ரொபர்ட் முகாபேவை முன்மாதிரியாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும்.
ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளின் மூலம் சர்வதேச சட்டங்களை மீறப்படுவதாகவும், இதன் காரணமாகவே சர்வதேச தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாட்டில் மீளவும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமாயின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply