இவ்வாண்டு சுதந்திர தின நிகழ்வில் புதிய தேசிய கீதம்
இலங்கையின் தேசிய நிகழ்வுகளில் இசைப்பதற்காக மீண்டும் எழுதப்பட்ட சிங்கள, தமிழ் வசனங்களுடனான தேசிய கீதத்தை தேசிய நல்லிணக்க அமைச்சு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த புதிய தேசியகீதம் எதிர்வரும் 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வில் இசைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
தேசிய நல்லிணக்க அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்குழு இந்த தேசியகீதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும் கையளித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் இரு மொழிகளிலும் இணைந்த தேசிய கீதம் ஒன்றை அறிமுகப்படுத்த தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நல்லிணக்க அமைச்சர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply