அரசியல் அமைப்பில் புதிய மாற்றம் கொண்டுவர விசேட குழு

புதிய அரசியல் அமைப்பு முறை ஒன்றை கொண்டுவருவது தொடர்பில் ஆராய விசேட குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (28) இரவு ஊடக நிறுவன பிரதானிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள அரசியல் அமைப்பில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவற்றை திருத்தம் செய்து மக்கள் இறைமையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply