விஸ்பரூபத்திற்கு முற்றாக தடை விதிக்க வேண்டும்!

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தினை முற்றாக தடை செய்ய வேண்டும் என இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் படத்தினைப் பார்த்த இலங்கை தவஹீத் ஜமாஅத் தீர்க்கமாக முடிவு செய்துள்ளதாக அவ்வமைப்பின் துணைச் செயலாளர் ரஸ்மின் தெரிவித்தார்.  தமிழ் உலகத்தில் தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தவ்ஹீத் அமைப்பினர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் போன்றோருக்கு இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் தணிக்கை குழுவினருடன் விஸ்பரூபம் காண்பிக்கப்பட்டதனையடுத்தே மேற்கண்டவாறு ரஸ்மின் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

படம் முழுக்க முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டியதோடு தீவிரவாதிகளை வழிநடத்தும் ஒரு வழிகாட்டி நூலாக குர்ஆனையும் காட்டியுள்ளார் கமல். எனவே நிச்சயமாக இப்படம் தடை செய்யப்பட வேண்டியதொன்றே.

தற்போது படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தினை வெளியிட தணிக்கை குழு முயற்சிக்கின்றது. ஆனால் இப்படத்தின் அனைத்து காட்சிகளும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் தவறான முறையிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளதனால் இப்படத்தினை முற்றாக தடை செய்வதே சரியானது என எங்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

எனவே இன்ஷா அல்லா இப்படத்தினை வெளியிடாமல் தடுப்பதற்கு நாங்கள் முழு முயற்சி எடுப்போம் என்றார்.

இதேவேளை இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கை சபை தலைவர் காமினி சுமனசேகர கருத்துத் தெரிவிக்கையில், விஸ்வரூபம் திரைப்படம் எந்தவொரு மதத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இல்லையென தாங்கள் கருதுவதாகவும் சில காட்சிகளை மட்டும் நீக்கி விட்டு விரைவில் இப்படத்தினை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தின் தடை மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply