டெசோ தீர்மானம் மீது உரிய நடவடிக்கை – பிரணாப் உறுதி

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டெசோ அமைப்பு குழுவினருடன் சந்தித்துப் பேசினார். அப்போது டெசோ மாநாட்டு தீர்மானங்களை பிரணாப் முகர்ஜியிடம் அவர் வழங்கினார். இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி ஈழத்தமிழ் மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட்டு சமத்துவம், அமைதி நிறைந்த வாழ்வு மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கோரிக்கை மனுவினைப் பெற்றுக் கொண்ட பிரணாப் முகர்ஜி, டெசோ தீர்மானம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக டெசோ அமைப்பு குழுவினரிடம் உறுதி அளித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply