சொத்து முழுவதையும் இழந்தாலும் தேச ஒற்றுமைதான் எனக்கு முக்கியம் : கமல்

விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீக்கி நேற்று இரவு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கமலஹாசன் பத்திரிகையாளர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது விஸ்வரூபம் படம் தடை, தடைக்கு தடை என்று போய்க்கொண்டே இருக்கிறது. இது ஏன் என்பது நிஜமாகவே எனக்கு விளங்கவில்லை. எனது, படம் நடக்கும் தளம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்காவில். நிலைமை இப்படியிருக்கும்போது, இது இந்திய முஸ்லீம்களை கேலி செய்யும் படமாக எப்படி இருக்கும்.
இன்று, தியேட்டருக்கு போன என்னுடைய ரசிகர்கள் போலீசாரால் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பெரும் செலவு செய்து இந்த படத்தை நான் எடுத்திருக்கிறேன். இதில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில் வியாபார முதலீட்டில் எனக்கிருக்கும் அனுபவத்தில் இந்த படத்தை நான் எடுத்தேன். இதற்காக எனது சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

இன்று நான் உங்களை சந்திக்கும் வீடு நாளை எனக்கு இருக்குமா என்று தெரியவில்லை. காரணம் இந்த வீட்டையும் நான் கடன் வாங்கியவருக்கு எழுதிக் கொடுத்துதான் படம் எடுத்திருக்கிறேன். அதை இழந்தாலும் கவலையில்லை. எனக்கு பணம் பெரிதல்ல. நான் தனி மனிதன். தனிமனிதன் நலனைவிட நாட்டின் ஒற்றுமையே முக்கியமென்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். நாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான் எனக்கும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply