நாட்டில் அதிகூடிய அதிகாரமுள்ள ஒரே அமைப்பு பாராளுமன்றமே : ஜனாதிபதி

பாராளுமன்றத்திற்கே நாட்டின் மற்றெல்லா அமைப்புகளை விடவும் கூடுதலான அதிகாரத்தை மக்கள் வழங்கியுள்ளார்கள். இந்த அதிகாரம் நாட்டின் அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் பாராளுமன்ற தலைவராக இருக்கும் சபாநாயகருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அழைப்பாணை பிறப்பிக்கும் அதிகாரம் எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் கள், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பாசிரியர்களை சந்தித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி: முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர வேண்டுமென்று முதன் முதலில் முன்மொழிந்தவர்கள் ஜே.வி.பியினரும், ஐக்கிய தேசிய கட்சியினரும் தான் என்பதை கடந்த கால நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.

அன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் இதைப்பற்றி சிந்திக்கக்கூட இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் ஷிராணி பண்டாரநாயக்கவின் தில்லுமுல்லுகள் பற்றியும் அவரது கணவர் வங்கியொன்றில் செய்த சில தவறான செயற்பாடுகள் குறித்தும் எமக்கு தகவல் கிடைத்தது.

ஊடகங்கள் மக்கள் அபிப்பிராயத்தை வலுப்படுத்தியதனால் தான் அரசாங்கம் குற்றப்பிரேரணையை கொண்டு வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் திருமதி ஷிராணி பண்டாரநாயக்கா பற்றிய பல தகவல்களை ஊடகங்கள் தான் வெளியிட்டு ஒரு மக்கள் அபிப்பிராயத்தை நாட்டில் உரு வாக்கின.

அதனால், தான் அரசாங்கம் ஊடகங்களின் விருப்பத்திற்கு அடிபணிந்து பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை ஒன்றை கொண்டுவருவதற்கு முடி வெடுத்தது.

நாட்டின் அரசியல் சாசனத்தின்படி, ஒருவருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணை செய்வதற்கான ஒரு குழுவை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று தீர்மானிக்கும் பூரண அதிகாரம் இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இருந்தது.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்மொழிந்த பரிந்துரைகளை நான் நிறைவேற்றுவதற்கு முன்னர் நான்கு கல்விமான்களின் அபிப்பிராயத்தை இது பற்றி தெரிந்து கொண்டேன். இலங்கையில் பிறந்து இன்று அவுஸ் திரேலிய பிரஜாவுரிமை பெற்றிருக்கும் மாக் குரே ஒரு தலைசிறந்த சட்ட மேதை.

அவர் பாராளுமன்ற தெரிவுக்குழு வின் முடிவு சரியென்று தெரிவித்தார். அவர் போன்று மேலும் மூன்று கல்விமான்கள் இந்த முடிவை பரிசீலனை செய்து இது சரியான தீர்ப்பென்று பாராட்டியிருக்கின்றார்கள். அம்மூவரும் தங்கள் பெயரை வெளியிடக்கூடாதென்று என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதனால் நான் அவர்களின் பெயரை வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றேன் என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply