இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த இளைஞர் அமைப்பினர் கைது

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகைக்கு முயற்சித்தோரை பொலிஸார் இன்று (30) தடுத்து நிறுத்தினர். இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட யாழ் பல்கலை.மாணவரை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் படுகொலையை செய்து முடித்த இலங்கை அரசு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பது இவர்களின் குற்றச்சாட்டு. முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.

அதேபோல் கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி தமிழர்களுக்கு உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களை கைது செய்தனர். இதற்கு சிங்கள மாணவர் அமைப்புகளும், பேராசிரியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலரை மட்டும் சித்ரவதைக்குப் பின் விடுதலை செய்துள்ளது.

மீதமுள்ள மாணவர்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இனவெறி மிகுந்த இலங்கை அரசிடம் இருந்து மாணவர்களை உயிருடன் மீட்பது தமிழக அரசின் கடமையாகும். இலங்கையில் நடைபெறும் கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்த இந்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும்.

இதனை வலியுறுத்தி நாளைய தினம் (ஜன.30) சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய தமிழ் ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் , இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தில் இன உணர்வோடு அனைவரும் பங்கு பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply